டென்னிஸ்

டென்னிஸ் போட்டி: சென்னை பல்கலைக்கழக அணி வெற்றி + "||" + Tennis Tournament: Chennai University team wins

டென்னிஸ் போட்டி: சென்னை பல்கலைக்கழக அணி வெற்றி

டென்னிஸ் போட்டி: சென்னை பல்கலைக்கழக அணி வெற்றி
டென்னிஸ் போட்டி போட்டியில், சென்னை பல்கலைக்கழக அணி வெற்றிபெற்றது.
புவனேசுவரம்,

முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேசுவரம் மற்றும் கட்டாக்கில் நடந்து வருகிறது.

இதில் டென்னிஸ் போட்டியில் முதலாவது சுற்றில் சென்னை பல்கலைக்கழக அணி, மணிப்பூரை பல்கலைக்கழகத்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. சென்னை அணியில் அபினவ் சஞ்சீவ் தனது ஆட்டத்தில் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். இதே போல் அர்ஜூன் மகாதேவனும் 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டு சென்னை அணி அடுத்த சுற்றை எட்ட உதவிகரமாக இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் நடைபெற இருந்த முக்கிய டென்னிஸ் போட்டிகள் ரத்து
சீனாவில் நடைபெற இருந்த முக்கிய டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட உள்ளன.