டென்னிஸ்

அகில இந்திய டென்னிஸ்: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’ + "||" + All India Tennis: SRM Team time champion

அகில இந்திய டென்னிஸ்: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’

அகில இந்திய டென்னிஸ்: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’
அகில இந்திய டென்னிஸ் போட்டியில், எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
சென்னை,

சென்னையை அடுத்த காலவாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் கல்லூரி அணிகளுக்கான அகில இந்திய டென்னிஸ் போட்டி அந்த கல்லூரி வளாகத்தில் நடந்தது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கிரண் அருணாச்சலா, ஓஜெஸ் தெய்ஜோ, யாஷ்வாத் ராகவ், கிருஷ்ணா தேஜா ஆகியோர் அடங்கிய எஸ்.ஆர்.எம். அணி 2-0 என்ற கணக்கில் எஸ்.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.