டென்னிஸ்

மெக்சிகோ சர்வதேச டென்னிஸ்: ரபெல் நடால் ‘சாம்பியன்’ + "||" + Mexico International Tennis: Rebel Nadal Champion

மெக்சிகோ சர்வதேச டென்னிஸ்: ரபெல் நடால் ‘சாம்பியன்’

மெக்சிகோ சர்வதேச டென்னிஸ்: ரபெல் நடால் ‘சாம்பியன்’
மெக்சிகோ சர்வதேச டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.
அகபுல்கோ,

அகபுல்கோ சர்வதேச டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டெய்லர் பிரைட்சை (அமெரிக்கா) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். இங்கு அவர் பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2005, 2013-ம் ஆண்டுகளில் பட்டம் வென்று இருக்கிறார்.


பின்னர் 33 வயதான நடால் கூறுகையில், ‘எனது வாழ்க்கையில் முதல் மிகப்பெரிய பட்டத்தை இங்கு தான் வென்றேன். 15 ஆண்டுகளுக்கு பிறகும் மகுடம் சூடியது வியப்பளிக்கிறது. சொந்த ஊரில் விளையாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இங்குள்ள ரசிகர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது’ என்றார். பட்டம் வென்ற நடாலுக்கு ரூ.2¾ கோடியும், 2-வது இடம் பெற்ற பிரைட்சுக்கு ரூ.1¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. மெக்சிகோவில் மகளிர் தின பேரணியில் பெரும் வன்முறை: 60 பெண்கள் காயம்
மெக்சிகோவில் மகளிர் தின பேரணியில் ஏற்பட்ட பெரும் வன்முறையில், 60 பெண்கள் காயமடைந்தனர்.
2. மெக்சிகோவில் குழந்தைகள் காப்பகத்தில் தீ விபத்து - 15 குழந்தைகள் பலி
மெக்சிகோவில் குழந்தைகள் காப்பகத்தில் எற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. மெக்சிகோவில் எரிமலை வெடிப்பு: 3 கி.மீ தொலைவிற்கு கரும் புகை சூழ்ந்தது
மெக்சிகோ நாட்டில் உள்ள போபோகாட்பெட் எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதியில் உள்ள நகரங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. மெக்சிகோ நாட்டில் அதிகாலை நேரத்தில் எரிவாயு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 6 பேர் பலி
மெக்சிகோ நாட்டில் அதிகாலை நேரத்தில் எரிவாயு நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.
5. 175 குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 34 பாதிரியார்கள்
மெக்சிகோவிலுள்ள சர்ச் ஒன்றில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியார்கள் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.