டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு சிக்கல்: செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப்போகிறது + "||" + Problem with French Open Tennis Tournament: Postponed to September

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு சிக்கல்: செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப்போகிறது

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு சிக்கல்: செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப்போகிறது
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. போட்டிகள் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப்போகிறது.
பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி பாரீஸ் நகரில் நடைபெற இருந்தது. களிமண் தரை போட்டியான பிரெஞ்ச் ஓபனும், கொரோனா வைரஸ் பரவலால் சிக்கலில் சிக்கியுள்ளது. சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துடன் ஆலோசித்த போட்டி அமைப்பாளர்கள் இந்த போட்டி செப்டம்பர் 20-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கும் என்று அறிவித்துள்ளனர்.