டென்னிஸ்

இங்கிலாந்து வீரர் விடுத்த சவாலில் ஜெயித்து காட்டிய ஜோகோவிச் தம்பதி + "||" + Djokovic couple who won the England Player Challenge

இங்கிலாந்து வீரர் விடுத்த சவாலில் ஜெயித்து காட்டிய ஜோகோவிச் தம்பதி

இங்கிலாந்து வீரர் விடுத்த சவாலில் ஜெயித்து காட்டிய ஜோகோவிச் தம்பதி
ஜோகோவிச் மற்றும் அவரது மனைவி ஜெலீனா இருவரும் சேர்ந்து டென்னிஸ் விளையாடி தொடர்ச்சியாக 100 ஷாட்டுகளை அடித்து இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே விடுத்த சவாலில் ஜெயித்து காட்டினர்.
லண்டன்,

இங்கிலாந்து முன்னணி டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேவும், அவரது மனைவி கிம் சியர்சும் சிறிய இடைவெளியில் நின்றபடி டென்னிஸ் பேட்டால் இடைவிடாது 100 ஷாட்டுகள் அடித்து விட்டு அந்த வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அத்துடன் இது மாதிரி தங்களது துணையுடன் இணைந்து 100 ஷாட்டுகளை அடிக்க முடியுமா? என்று ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோருக்கு சவால் விட்டிருந்தார்.

இந்த சவாலை ஏற்று ஜோகோவிச் தனது மனைவி ஜெலீனாவுடன் கைகோர்த்து டென்னிஸ் மட்டையை சுழட்டினார். தங்களது வீட்டு முற்றத்தில் நின்றபடி இருவரும் தொடர்ச்சியாக 100 ஷாட்டுகளை அடித்து சவாலில் ஜெயித்து காட்டினர். அந்த வீடியோவை தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோகோவிச், ‘100 ஷாட் சவால் ஜெலீனாவுக்கு மிகவும் எளிதாக இருந்தது. ஜாலியாக அமைந்த இந்த சவாலுக்கு வித்திட்ட முர்ரே-கிம் தம்பதிக்கு நன்றி. அவர்களிடம் இருந்து தொடர்ந்து சவாலான விஷயங்கள் வெளிவர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் முர்ரேவின் சவாலை ஏற்றுக்கொள்ள பெடரர் தயங்குகிறார். தனது மனைவியும், முன்னாள் வீராங்கனையுமான மிர்கா சமூக வலைதளம் என்றாலே கூச்சப்படுவார் என்று ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு பெடரர் பதில் அளித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. யுவராஜ்சிங்கின் சவாலை ஏற்று கண்களை துணியால் கட்டிக்கொண்டு அசத்திய தெண்டுல்கர்
யுவராஜ்சிங்கின் சவாலை ஏற்று கண்களை துணியால் கட்டிக்கொண்டு தெண்டுல்கர் அசத்தினார்.
2. தெண்டுல்கருக்கு யுவராஜ்சிங் சவால்
சச்சின் தெண்டுல்கருக்கு யுவராஜ்சிங் சவால் விடுத்துள்ளார்.
3. குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசியலை விட்டு விலக தயார் தளவாய்சுந்தரம் சவால்
குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசியலை விட்டு விலக தயார் என தளவாய்சுந்தரம் சவால் விடுத்துள்ளார்.
4. சி.ஏ.ஏ.வில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்; முரளிதரராவ் சவால்
சி.ஏ.ஏ.வில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என மு.க. ஸ்டாலினுக்கு முரளிதரராவ் சவால் விடுத்து உள்ளார்.
5. கெஜ்ரிவாலின் சவாலுக்குத் தயார் - அமித் ஷா
அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலுக்கு தான் தயார் என்றும், நேரத்தையும் இடத்தையும் சொல்லுங்கள் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.