டென்னிஸ்

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல் முன்னேற்றம் + "||" + Table tennis rankings progress

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல் முன்னேற்றம்

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல் முன்னேற்றம்
சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
புதுடெல்லி, 

சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் 7 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த மாதம் அவர் ஓமன் ஓபனில் பட்டம் வென்றார். அதனால் அவருக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. சக நாட்டவரான சத்யன் ஒரு இடம் இறங்கி 32-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு தமிழக வீரர் அந்தோணி அமல்ராஜ் 100-வது இடம் வகிக்கிறார்.

பெண்கள் தரவரிசையில் இந்தியாவின் சிறந்த நிலையாக மனிகா பாத்ரா 63-வது இடத்தில் இருக்கிறார். சுதிர்தா முகர்ஜீ முதல் முறையாக டாப் 100-க்குள் நுழைந்துள்ளார். அவர் 14 இடங்கள் உயர்ந்து 95-வது இடத்தை பெற்றுள்ளார். கொரோனா அச்சத்தால் ஜூன் 30-ந்தேதி வரை அனைத்து டேபிள் டென்னிஸ் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மீண்டும் போட்டி தொடங்கும் வரை தரவரிசை புள்ளிகள் அதே நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. டேபிள் டென்னிஸ் சென்னை பல்கலைக்கழக பெண்கள் அணிக்கு தங்கப்பதக்கம்
டேபிள் டென்னிஸ் போட்டியில், சென்னை பல்கலைக்கழக பெண்கள் அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
2. டேபிள் டென்னிஸ் ஒலிம்பிக் வாய்ப்பை இந்திய அணிகள் நெருங்கியது
டேபிள் டென்னிஸ் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டி போர்ச்சுகல் நாட்டில் உள்ள கோன்டோமர் நகரில் நடந்து வருகிறது.