தடுப்பூசி போடுவதை எதிர்க்கிறேன் - டென்னிஸ் வீரர் ஜோகோவிச்


தடுப்பூசி போடுவதை எதிர்க்கிறேன் - டென்னிஸ் வீரர் ஜோகோவிச்
x
தினத்தந்தி 20 April 2020 7:18 AM GMT (Updated: 20 April 2020 7:18 AM GMT)

தனிப்பட்ட முறையில் நான் தடுப்பூசி போடுவதை எதிர்க்கிறேன் என்று உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

செர்பியா,

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனா வைரசால் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில்   கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை இன்று 543 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 17,265 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2020 விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வருடம் எவ்வித டென்னிஸ் போட்டிகளும் நடக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. 

இந்நிலையில் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஒரு பேட்டியில் கூறியதாவது:

தனிப்பட்ட முறையில் நான் தடுப்பூசி போடுவதை எதிர்க்கிறேன். தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தான் பயணம் செய்ய முடியும் எனக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இது கட்டாயமாக்கப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அப்போது இதுகுறித்து யோசித்து முடிவு எடுப்பேன். இதுகுறித்து எனக்கென்று சில கருத்துகள் உள்ளன. அந்த கருத்துக்கள் ஒரு கட்டத்தில் மாறுமா என்பது எனக்குத் தெரியாது.

ஜூலை, ஆகஸ்ட், அல்லது செப்டம்பரில் டென்னிஸ் ஆட்டங்கள் தொடங்கினால், அதற்குச் சாத்தியமில்லை என்றாலும் கூட, அப்போதும் தடுப்பூசி தேவைப்படும். தற்போது வரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story