டென்னிஸ்

விலை உயர்ந்த ஷூ வழங்கிய நடிகை பரினீத்தி சோப்ராவிற்கு நன்றி - சானியா மிர்சா + "||" + Sania Mirza shares an adorable picture of her son Izhaan

விலை உயர்ந்த ஷூ வழங்கிய நடிகை பரினீத்தி சோப்ராவிற்கு நன்றி - சானியா மிர்சா

விலை உயர்ந்த ஷூ வழங்கிய நடிகை பரினீத்தி சோப்ராவிற்கு நன்றி - சானியா மிர்சா
விலை உயர்ந்த ஷூ வழங்கிய நடிகை பரினீத்தி சோப்ராவிற்கு சானியா மிர்சா நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.  2018ல் சோயப் மாலிக் - சானியா மிர்சா தம்பதிக்கு இஜான் என்ற மகன்  பிறந்தான். தற்போது வீட்டில் இருக்கும் சானியா  மகனின் படங்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படத்தில், இஜான் விலை உயர்ந்த ஷூ அணிந்து இருந்தான். இதனை சானியாவின் நெருங்கிய தோழியான பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா பரிசாக அளித்துள்ளார். இதற்காக பரினீத்திக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆண்கள், பெண்கள் டென்னிஸ் சங்கங்களை இணைத்து ஒரே வலிமையான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்ற சுவிட்சர்லாந்து வீரர் பெடரர் கருத்துக்கு சானியா ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரம்ஜான் பண்டிகை- ரசிகர்களுக்கு சானியா மிர்சா வாழ்த்து
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜானையொட்டி தனது ரசிகர்களுக்கு சானியா மிர்சா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2. புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை வேதனையை அளிக்கிறது - சானியா மிர்சா
புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை வேதனையை அளிக்கிறது என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
3. கொரோனா வைரஸ் எதிரொலி: விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் - சானியா மிர்சா
விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வகையான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.
4. ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி ‘சாம்பியன்’
ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இணை சாம்பியன் பட்டம் வென்றது.