டென்னிஸ்

போட்டியில் தோற்றதால், ஜோகோவிச்சுக்கு இரவு உணவு வாங்கித் தர வேண்டியிருந்தது - ஷரபோவா + "||" + "You Were Fanboying": How Novak Djokovic Got Maria Sharapova To Buy Him Dinner

போட்டியில் தோற்றதால், ஜோகோவிச்சுக்கு இரவு உணவு வாங்கித் தர வேண்டியிருந்தது - ஷரபோவா

போட்டியில் தோற்றதால், ஜோகோவிச்சுக்கு இரவு உணவு வாங்கித் தர வேண்டியிருந்தது - ஷரபோவா
ஒரு போட்டியில் தோற்றதால், ஜோகோவிச்சுக்கு இரவு உணவு வாங்கித் தர வேண்டியிருந்தது என மரிய ஷரபோவா தெரிவித்துள்ளார்.
பாரீஸ்,

உலகின் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக வலம் வந்த ‘ரஷிய புயல்’ மரிய ஷரபோவா சர்வதேச டென்னிசில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 32 வயதான ஷரபோவா 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளர் ஆவார்.

இந்தநிலையில், மரிய ஷரபோவா ஜோகோவிச் உடனான இன்ஸ்டாகிராம் நேரடி உரையாடலின் போது, ஷரபோவா கலப்பு-இரட்டையர் டையில் இருவரும் எதிரெதிராக இருந்த ஒரு போட்டியை குறித்து பேசினார். அதில், ஒருவேளை ஷரபோவாவை அவர் வென்றால், அவருக்கு இரவு உணவு வாங்கித் தர வேண்டும் என்று ஜோகோவிச் கூறியதை நினைவு கூர்ந்தார். சவாலை ஏற்ற ஷரபோவா, அந்தப் போட்டியை தோற்றதால், ஜோகோவிச்சுக்கு இரவு உணவு வாங்கித் தர வேண்டியிருந்தது. அந்த இரவு உணவின் போது, ஜோகோவிச் தனது ரசிகர் தருணத்தைக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார். மேலும் “நான் இரவு உணவிற்கு என்னை ஏலம் எடுத்தது போல் இருந்தது,” ஷரபோவா கூறியதும் இருவரும் சிரித்தனர்.

17 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவர், ஒரு கேமராவை வெளியே எடுத்து, உணவக ஊழியர்களிடம் இருவரின் படத்தையும் கிளிக் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...