டென்னிஸ்

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ரத்தாக வாய்ப்பு + "||" + Australian Open 2021 could be canceled due to COVID-19 pandemic, says chief executive

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ரத்தாக வாய்ப்பு

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ரத்தாக வாய்ப்பு
அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மெல்போர்னில் நடத்தப்படுகிறது. இன்னும் 8 மாதங்கள் இருந்தாலும் அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

‘ஆட்கொல்லி நோயான கொரோனா பரவலை தடுக்க ஆஸ்திரேலிய அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டி உள்ளது. உள்ளூர் ரசிகர்கள் மட்டுமே அனுமதி மற்றும் வெளிநாட்டு வீரர்களை தனிமைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் போட்டியை ரத்து செய்ய நேரிடலாம். ஆனாலும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு எல்லாவிதமான அம்சங்களையும் கவனத்தில் கொண்டு தீவிர முயற்சி எடுப்போம்’ என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த ஆண்டுக்கான உலக குத்துச்சண்டை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா இழந்தது
அடுத்த ஆண்டுக்கான உலக குத்துச்சண்டை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா இழந்தது.
2. அடுத்த ஆண்டு நடக்கும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு
அடுத்த ஆண்டு நடக்கும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
3. அடுத்த ஆண்டு சந்திரயான்-3 திட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
அடுத்த ஆண்டு சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
4. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1 லட்சத்து 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் - மத்திய பணியாளர் தேர்வு ஆணைய தலைவர் தகவல்
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1 லட்சத்து 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய பணியாளர் தேர்வு ஆணைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.