டென்னிஸ்

பெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோரில் சிறந்த வீரர் யார்? - இவான் லென்டில் பேட்டி + "||" + Who is the best player of Federer, Nadal and Djokovic? - Interview with Ivan Lendl

பெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோரில் சிறந்த வீரர் யார்? - இவான் லென்டில் பேட்டி

பெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோரில் சிறந்த வீரர் யார்? - இவான் லென்டில் பேட்டி
பெடரர், கோகோவிச், நடால் ஆகியோரில் சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு இவான் லென்டில் பதில் அளித்துள்ளார்.
நியூயார்க், 

சர்வதேச டென்னிஸ் உலகில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்), நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோரின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. பெடருக்கு 38 வயது ஆனாலும் இன்னும் இளம் வீரர்களுக்கு ஈடுகொடுத்து மிரட்டுகிறார். அவரே அதிக கிராண்ட்ஸ்லாம் (20 பட்டம்) வென்ற சாதனையாளராக திகழ்கிறார். களிமண்தரை ஆடுவதில் கில்லாடியான 2-ம் நிலை வீரரான 33 வயது நிரம்பிய நடால் 12 பிரெஞ்ச் ஓபன் உள்பட 19 கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றி இருக்கிறார்.

தற்போது உலகின் ‘நம்பர் ஒன்’ வீரர் என்ற மிடுக்குடன் வலம் வரும் 32 வயதான ஜோகோவிச் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வசப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இவர்களில் யார் எல்லா காலத்திலும் சிறந்த டென்னிஸ் வீரராக அறியப்படுவார் என்று முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான இவான் லென்டிலிடம் கேட்கப்பட்டது. இவரும் 8 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் ஆவார்.

செக்கோஸ்லோவக்கியாவுக்காக விளையாடி பிறகு அமெரிக்காவில் குடியேறி விட்ட 60 வயதான இவான் லென்டில் கூறுகையில், ‘பெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோரில் யார் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்கிறார்களோ அவர்களே ‘ஓபன் எரா’ (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் மிகச்சிறந்த வீரராக இருப்பார். இந்த பட்டியலில் பெடரரே முன்னணியில் இருப்பதாக நீங்கள் கூற முடியும். ஆனால் இந்த ‘ரேஸ்’ இன்னும் முடிந்து விடவில்லை. அவர்கள் அனைவரும் ஓய்வு பெற்ற பிறகு யார் அதிக பட்டம் வென்றிருக்கிறார்கள் என்பதை பார்த்து அதன் பிறகே மதிப்பிட முடியும். அதனால் இப்போதைக்கு எந்த முடிவுக்கும் நான் வரமாட்டேன்.

பெடரர், நடாலை காட்டிலும் ஜோகோவிச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குறைவாக இருப்பதாக சொல்கிறீர்கள். யார் மிகவும் பிரபலமானவராக இருக்கிறார்களோ அவர்களுக்கு மக்களின் வரவேற்பு அதிகமாகத் தான் இருக்கும். ஆனால் மக்களின் செல்வாக்கின் மூலம் யார் சிறந்த வீரர் என்பதை மதிப்பிட முடியாது. என்னை பொறுத்த வரை ‘ஓபன் எரா’ வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தில் சிறந்த வீரர் ஆஸ்திரேலியாவின் ரோட் லாவர் (11 கிராண்ட்ஸ்லாம் வென்றவர்) தான்’ என்றார்.