டென்னிஸ்

பெட் கோப்பை ஹார்ட் விருதுக்கு சானியா மிர்சா தேர்வு + "||" + Sania Mirza Becomes First Indian to Win The Fed Cup Heart Award

பெட் கோப்பை ஹார்ட் விருதுக்கு சானியா மிர்சா தேர்வு

பெட் கோப்பை ஹார்ட் விருதுக்கு சானியா மிர்சா தேர்வு
ஹார்ட் விருதுக்கான ஆசிய-ஓசியானா மண்டலத்திலிருந்து இந்திய வீராங்கனை சானியா மிர்சா தேர்வாகியுள்ளார்.
புதுடெல்லி, 

 2 ஆண்டுகளுக்குபின் களம் திரும்பிய இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் விளையாடினார். இந்தநிலையில் அவரது பெயர், இந்தோனேஷியாவின் பிரிஸ்கா நுக்ரோகோவுடன் இணைந்து பெட் கோப்பை இதய (ஹார்ட்) விருதுக்கு ஆசியா-ஓசியானியா மண்டலத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த ஆண்டு ஹார்ட் விருதுக்கான ஆசிய-ஓசியானா மண்டலத்திலிருந்து இந்திய வீராங்கனை சானியா மிர்சா தேர்வாகியுள்ளார். 

சானியா மிர்சா மற்றும் இந்தோனேசியாவின் 16 வயது வீராங்கனை பிரிஸ்கா ஆகிய இருவரும் பரிந்துரைக்கப்பட்டதில் சானியா மிர்சாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மே 1 முதல் இணைய தளம் வழியாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சானியா மிர்சா இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.

இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை 33 வயது சானியா மிர்சா பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட இரண்டாயிரம் டாலர் தொகையை தெலுங்கானா முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...