பிற விளையாட்டு

முன்னாள் டேபிள் டென்னீஸ் வீரர் மன்மீத் சிங் காலமானார் + "||" + Former national table tennis champion Manmeet Singh Walia passed away

முன்னாள் டேபிள் டென்னீஸ் வீரர் மன்மீத் சிங் காலமானார்

முன்னாள் டேபிள் டென்னீஸ் வீரர் மன்மீத் சிங் காலமானார்
பிரபல முன்னாள் டேபிள் டென்னீஸ் வீரர் மன்மீத் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.
புதுடெல்லி,

டேபிள் டென்னிஸ் முன்னாள் சாம்பியன் மன்மீத் சிங் (வயது 58) ஏமையோட்ராபிக் லேட்டரல் ஸ்க்ளிரோசிஸ்  என்கிற நரம்புக் கோளாறு நோயால் கடந்த இரு வருடங்களாக  அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

தேசிய ஜூனியர் சாம்பியன், தேசிய இரட்டையர் சாம்பியன் ஆகிய பட்டங்களை முதலில் வென்ற மன்மீத் சிங், 1989-ல் ஸ்ரீராமைத் தோற்கடித்து ஒற்றையர் போட்டியில் தேசிய சாம்பியன் ஆனார். 1980களில் இந்தியாவின் மிகச்சிறந்த டேபிள் டென்னிஸ் வீரராக விளங்கினார். 

1990-ம் ஆண்டுக்கு ஓய்வு பிறகு கனடாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டார். கனடாவின் மாண்ட்ரியலில் மரணமடைந்த மன்மீத் சிங்குக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.