சர்வதேச போட்டிகளில் செயற்கை பூப்பந்து அறிமுகப்படுத்த வாய்ப்பில்லை


சர்வதேச போட்டிகளில் செயற்கை பூப்பந்து அறிமுகப்படுத்த வாய்ப்பில்லை
x
தினத்தந்தி 15 May 2020 12:34 PM GMT (Updated: 15 May 2020 12:34 PM GMT)

சர்வதேச போட்டிகளில் செயற்கை பூப்பந்து அறிமுகப்படுத்த வாய்ப்பில்லை என பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தொற்றுநோயை அடுத்து சர்வதேச போட்டிகளில் அடுத்த ஆண்டு செயற்கை பூப்பந்து  அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று  பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF) தெரிவித்துள்ளது. 

ஜனவரியில், 2021 முதல் அனைத்து மட்டங்களிலும் அனுமதிக்கப்பட்ட சர்வதேச போட்டிகளில் செயற்கை இறகு பூப்பந்துகளை பயன்படுத்த  பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு ஒப்புதல் அளித்தது. தற்போது கொரோனா தொற்றால் இது பயன்படுத்துவதை தடை விதித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள பூப்பந்து வழக்கமாக வாத்து இறகுகளால் ஆனவை.

இது குறித்து சர்வதேச கூட்டமைப்பு (ஐ.சி.எப்) பயிற்சியாளர் விக்ரம் தார் கூறுகையில்,

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பூப்பந்து போட்டிகளையும் இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, செயற்கை பூப்பந்து தயாரிக்கும் தொழில்துறையை கடுமையாக தாக்கும். அதற்கு நேரம் எடுக்கும், அதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்றார்.

Next Story