டென்னிஸ்

டென்னிஸ் பிரபலத்துடன் விருந்து சாப்பிட ரூ.65 லட்சம் வழங்கும் ரசிகர் + "||" + The fan who pays Rs.65 lakh to dine with the tennis celebrity

டென்னிஸ் பிரபலத்துடன் விருந்து சாப்பிட ரூ.65 லட்சம் வழங்கும் ரசிகர்

டென்னிஸ் பிரபலத்துடன் விருந்து சாப்பிட ரூ.65 லட்சம் வழங்கும் ரசிகர்
டென்னிஸ் பிரபலத்துடன் விருந்து சாப்பிட ரசிகர் ஒருவர் ரூ.65 லட்சம் வழங்கி உள்ளார்.
நியூயார்க், 

கனடா டென்னிஸ் வீராங்கனை எவ்ஜின் பவுச்சார்ட் கொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்டும் வகையில் அமெரிக்க அறக்கட்டளை நடத்தும் ஏலத்தில் ஜெயிக்கும் ஒரு ரசிகருடன் இரவு விருந்து சாப்பிடுவேன் என்று அறிவித்து இருந்தார். இதையடுத்து 37 ரசிகர்கள் போட்டி போட்டு ஏலத்தொகையை உயர்த்தினர். ஏறக்குறைய ரூ.2 லட்சத்தில் ஆரம்பித்து கடைசியாக ரூ.65 லட்சம் வழங்க ஒரு ரசிகர் முன்வந்துள்ளார். அவரே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த ரசிகர் கொடுக்கும் பணம் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். பவுச்சார்ட் விளையாடும் ஏதாவது ஒரு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியை அந்த ரசிகர் சொகுசு இருக்கையில் அமர்ந்து பார்க்கலாம். போட்டியை பார்க்க செல்வதற்கான விமான கட்டணம் ஏற்றுக் கொள்ளப்படும். பவுச்சார்ட்டுடன் செல்பி, ஆட்டோகிராப், இரவில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் வாய்ப்பு ஆகியவையும் அந்த தீவிர ரசிகருக்கு கிடைக்கும். இவ்வளவு பெரிய தொகையா என்று வியந்து போயுள்ள பவுச்சார்ட் அந்த ரசிகரை சந்திக்க ஆர்வமுடன் இருப்பதாக கூறியுள்ளார். 26 வயதான பவுச்சார்ட் 2014-ம் ஆண்டு விம்பிள்டனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியரின் தேர்வுகள்...