டென்னிஸ்

இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை ஹீத்தர் வாட்சன் குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் + "||" + British tennis ace Heather Watson stuns in a white bikini as she celebrates her 28th birthday

இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை ஹீத்தர் வாட்சன் குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்

இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை ஹீத்தர் வாட்சன் குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்
ஊரடங்கு நிலையிலும் இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை ஹீத்தர் வாட்சன் தனது 28 வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் வெள்ளை பிகினியில் கொண்டாடினார்.
லண்டன்

உலகளாவிய தொற்றுநோயால் இந்த ஆண்டு தொடக்கத்தில் டென்னிஸ் போட்டிகள் மற்றும் விம்பிள்டன் போன்ற கிராண்ட்ஸ்லாம்  போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.கொரோனா நெருக்கடியால் டென்னிஸ் உள்ளிட்ட பலவேறு விளையாட்டு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு ஊரடங்கு அறிவிக்கபட்ட நிலையில் இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை ஹீத்தர் வாட்சன் தனது 28 வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் நேற்று கொண்டாடினார்,  விருந்து கொண்டாட்ட நிக்ழ்ச்சிகளின் படங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

கொண்டாட்டத்தின் போது டென்னிஸ் வீராங்கனை பலூன்கள் மற்றும் பரிசுகளால் நிரம்பப்பட்ட ஒரு மேசையின் முன்னால் ஒரு வெள்ளை நீச்சல் உடையில் உள்ளார். ஹீத்தர், ஒரு கையில் ஷாம்பெயின் வைத்துக் கொண்டு பிரகாசமாக சிரித்தபடி போஸ் கொடுத்து உள்ளார்.

தற்போது அவரது பெற்றோர்களான மைக்கேல் மற்றும் இயானுடன் தனது சொந்த ஊரான குர்ன்சியில்  செலவிட்டுவருகிறார்.

அவரது பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, புதன்கிழமை ஹீதர் தனது நன்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். பிறந்தநாள் அன்பு அனைத்திற்கும் நன்றி என கூறி உள்ளார்.

ஹீத்தர் பிரிட்டிஷ் டென்னிஸ் உலகில் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒருவராவார், மேலும் 2016 விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பிலிருந்து கலப்பு-இரட்டையர் தலைப்பு உட்பட பல பட்டங்களை பெற்று உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,460 ஆக உயர்வு
இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 37,460 ஆக உயர்ந்துள்ளது.
2. இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா?
இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
3. இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் கொலை வழக்கில் இந்தியர் கைது
இங்கிலாந்தில் கொலை வழக்கில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
5. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 468 பேர் பலி
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 468 பேர் உயிரிழந்ததால், அங்கு பலி எண்ணிக்கை 34,466 ஆக உயர்ந்துள்ளது.