ரம்ஜான் பண்டிகை- ரசிகர்களுக்கு சானியா மிர்சா வாழ்த்து + "||" + Eid-ul-Fitr 2020: Sania Mirza Has An Important Message For Fans On Eid During Coronavirus
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜானையொட்டி தனது ரசிகர்களுக்கு சானியா மிர்சா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஐதரபாத்,
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேவேளையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், ரம்ஜான் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதையும் சானியா மிர்சா தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சானியா மிர்சா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- இந்த ரம்ஜான் பண்டிகையில் எனது அன்புக்கு உரியவர்களுக்காக நான் எனது வீட்டிலேயே இருக்கிறேன். நீங்களும் இதையே பின்பற்றுங்கள். ரம்ஜான் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். தனது மகன் இஷானுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் சானியா மிர்சா பதிவிட்டுள்ளார்.