டென்னிஸ்

பால்கன் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வுடன் இணைகிறேன் - நோவக் ஜோகோவிச் + "||" + Novak Djokovic Says Alexander Zverev is Joining Him in Balkan Tournament Line-up

பால்கன் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வுடன் இணைகிறேன் - நோவக் ஜோகோவிச்

பால்கன் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வுடன் இணைகிறேன் -  நோவக் ஜோகோவிச்
அடுத்த மாதம் நடைபெற உள்ள பால்கன் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வுடன் இணைகிறேன் என நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
பெல்கிரேடு,

டென்னிஸ் உலக ஏழாவது நம்பர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அடுத்த மாதம் நோவக் ஜோகோவிச்வுடன் பால்கன் போட்டியில் இணைகிறார்.

செர்பியா தலைநகரில் இது குறித்து   ‘நம்பர் ஒன்’ வீரராக வலம் வரும் 32 வயதான ஜோகோவிச்  கூறுகையில், நான் அறிவிக்க விரும்பும் தனித்துவமான செய்தி என்னவென்றால், சாசா ஸ்வெரெவ், அலெக்சாண்டர் ஸ்வெரெவ், பெல்கிரேடிற்கு வருவார். உலகின் மிகச்சிறந்த டென்னிஸ் நட்சத்திரங்கள் மூன்று. நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 


பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது எனக்கு தெரியாது.  ஜூன் 13 க்குள் சில விதிகள் மாற்றப்படும் என்று நம்புகிறேன், பார்வையாளர்களை பார்க்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கொரோனா வைரஸால் ஏற்படும் இந்த நிலைமை தொடர்பான பல விஷயங்களைப் போலவே இது இன்னும் நிச்சயமற்றது.

சுற்றுப்பயணத்திலிருந்து திரட்டப்பட்ட பணம் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.