டென்னிஸ்

ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - டென்னிஸ் வீராங்கனை பெட்ரா குவித்தோவா + "||" + Grand Slam doesn’t deserve it” – Petra Kvitova

ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - டென்னிஸ் வீராங்கனை பெட்ரா குவித்தோவா

ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - டென்னிஸ் வீராங்கனை பெட்ரா குவித்தோவா
ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என டென்னிஸ் வீராங்கனை பெட்ரா குவித்தோவா கூறியுள்ளார்.
செக் குடியரசு,

கொரோனா அச்சுறுத்தல் ஒரு பக்கம் தொடர்ந்தாலும் விளையாட்டு போட்டிகள் மீண்டும் நடக்கத் தொடங்கி உள்ளன. இந்தநிலையில் செக் குடியரசில் அந்நாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் ‘ஹார்டுகோர்ட் டிரா’ டென்னிஸ் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் முன்னணி வீராங்கனை பெத்ரா குவித்தோவா, ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.


குவித்தோவா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

‘எனக்கு இன்னும் வயது உள்ளது. ஓரிரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். ஆனால், சூழ்நிலை இப்படியே தொடர்ந்தால் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடுவதை தவிர்த்துவிடுவேன் என தெரிவித்துள்ளார். மேலும்

வீரர்களான எங்களுக்கு ரசிகர்கள் தான் இன்ஜின்கள். அவர்கள் தருகின்ற உற்சாகமும், ஆரவார வரவேற்பும் தான் எங்களை விளையாட தூண்டுகிறது. களத்தில் ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது எனக்கு அழகாகத் தெரியவில்லை. அப்படி விளையாடும் போட்டிகளை கிராண்ட்ஸ்லாம் என்றும் சொல்ல முடியாது. ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதை விட அவற்றை ரத்து செய்து விடுவது நல்லது என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில்,

இந்த வாரம் மீண்டும் போட்டிகளில் விளையாடுவதற்கு நெகிழ்ச்சியுடன் உணர்கிறேன். நிச்சயமாக நிலைமை வேறுபட்டது, ஆனால் நான் இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறேன் என்று சொல்வது இன்னும் நன்றாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.