டென்னிஸ்

மீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச் + "||" + Easy to turn down US Open if you have earned USD 150 million: Danielle Collins hits back at Novak Djokovic

மீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்

மீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்
டென்னீஸ் வீரர் ஜோகோவிச் மீண்டும் களம் இறங்க உள்ளார்.
செர்பியா,

கொரோனா காரணமாக ஜூலை மாதம் வரை அனைத்து சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் செர்பியாவின் ஜோகோவிச் அறக்கட்டளை அமைப்புக்கு உதவும் வகையில் அட்ரியா கண்காட்சி டென்னிஸ் தொடர் நடத்தப்பட உள்ளது.


இன்று செர்பியாவின் பெல்கிரேடில் இத்தொடர் தொடங்குகிறது. அடுத்து ஜடார் (ஜூன் 21-;22), மான்டெனக்ரோ (27-;28), பன்ஜ லுகா (ஜூலை 3-;4) நகரங்களில் இது நடக்கும். மூன்று மாதத்திற்குப் பின் களமிறங்கும் ஜோகோவிச்சுடன், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், பல்கேரியாவின் டிமிட்ரோவ், குரோஷியாவின் போர்னா கோரிச், மரின் சிலிச் இதில் பங்கேற்க சம்மதித்துள்ளனர்.

இதற்கான முதல் 1000 டிக்கெட்டுகள் 7 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.