‘டென்னிசை விட்டு விலகும் எண்ணம் இல்லை’ - 40 வயதை எட்டும் வீனஸ் பேட்டி + "||" + No intention of quitting tennis Reaching 40 years of age Interview with Venus
‘டென்னிசை விட்டு விலகும் எண்ணம் இல்லை’ - 40 வயதை எட்டும் வீனஸ் பேட்டி
டென்னிசை விட்டு விலகும் எண்ணம் இல்லை என்று 40 வயதை எட்டும் வீனஸ் பேட்டி அளித்துள்ளார்.
நியூயார்க்,
அமெரிக்காவின் முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் இன்று தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 1994-ம் ஆண்டு டென்னிஸ் களத்தில் அடியெடுத்து வைத்த வீனஸ் இதுவரை 7 கிராண்ட்ஸ்லாம் பட்டமும் (5 விம்பிள்டன் மற்றும் 2 அமெரிக்க ஓபன்), ஒலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கமும் வென்று இருக்கிறார்.
ஆனால் அவரது ஆட்டத்திறன் முன்பு போல் இல்லை. 2016-ம் ஆண்டுக்கு பிறகு எந்த சர்வதேச பட்டமும் வெல்லவில்லை. ஆனாலும் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி இருக்கிறார். இது குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில், ‘எனக்கு எப்போதும் கனவு உண்டு. அதை நோக்கி தொடர்ந்து பயணிக்கிறேன். நான் இன்னும் பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வெல்லவில்லை. அதை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.
இவ்விரு பட்டங்களையும் நெருங்கி வந்து கோட்டை விட்டிருக்கிறேன். என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது. உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஆனாலும் இன்னும் முடிந்த அளவுக்கு வெற்றிகளை குவிக்க ஆசைப்படுகிறேன். உரிய நேரம் வரும் போது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவேன்’ என்றார்.