டென்னிஸ்

பிரபல டென்னிஸ் வீரர் கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு + "||" + Grigor Dimitrov Tests Positive For Coronavirus, Week After Playing In Novak Djokovic Event

பிரபல டென்னிஸ் வீரர் கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு

பிரபல டென்னிஸ் வீரர் கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிப்பு
பல்கேரியாவைச்சேர்ந்தவரும் 19-வது நிலை டென்னிஸ் வீரரான கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

 பல்கேரியாவை சேர்ந்த  பிரபல டென்னிஸ் நட்சத்திரமான கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சுடன் காட்சி டென்னிஸ் போட்டியில்  கிரிகோர் டெமிட்ரோவ் கலந்து கொண்டு விளையாடினார் என்பது கவனிக்கத்தக்கது. 

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில்  டெமிட்ரோவ்  பதிவிட்டுள்ளார். தனது பதிவில்,  மொனோகாவில் இருந்து திரும்பிய பிறகு எனக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது. என்னுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடனும் கொரோனா பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள். 

நான் ஏதேனும் தீங்கு ஏற்படுத்தியிருந்தால் அதற்காக   வருந்துகிறேன். நான் இப்போது வீடு திரும்பி மீண்டு வருகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.  பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.