டென்னிஸ்

பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக்கிற்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona vulnerability confirmed for veteran tennis player Novak Djokovic

பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக்கிற்கு கொரோனா பாதிப்பு

பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக்கிற்கு கொரோனா பாதிப்பு
பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெல்கிரேடு,

டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் நோவக் ஜோகோவிக் (வயது 33).  செர்பியா நாட்டை சேர்ந்த இவர் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனைகளை படைத்துள்ளார்.  இந்த வருடம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் வெற்றியாளராகவும் அவர் உள்ளார்.

இந்நிலையில், குரோசியா மற்றும் செர்பியா நாடுகளில் வாராந்திர டென்னிஸ் போட்டிகளை தலைமையேற்று இவர் நடத்தியுள்ளார்.  இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் டென்னிஸ் வீரர்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர்.  இந்த நிலையில், ஜோகோவிக்கிற்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், செர்பியாவின் பெல்கிரேடு நகருக்கு வந்தவுடன் எங்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  இதில் எனக்கும், எனது மனைவி ஜெலினாவுக்கும் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.  எங்களுடைய குழந்தைகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

இதனால் தொடர்ந்து 14 நாட்களுக்கு நான் சுய தனிமைப்படுத்துதலில் இருப்பேன்.   அடுத்த 5 நாட்களில் மீண்டும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்வேன் என்று தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று இவர் நடத்திய போட்டிகளில் விளையாடிய குரோசியா நாட்டின் போர்னா காரிக், பல்கேரியா நாட்டின் கிரிகோர் டிமிட்ரோவ் மற்றும் விக்டர் டிராய்க்கி ஆகியோருக்கு முன்பே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில், பல நாட்டு வீரர்களை அழைத்து போட்டிகளை நடத்தியதற்காக ஜோகோவிக்கிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. விருதுநகர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர், டாக்டர் உள்பட 161 பேருக்கு கொரோனா பாதிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் டாக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 1,906 ஆக உயர்ந்துள்ளது.
2. அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 492 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 461 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி இருந்தனர். இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
3. தேனி மாவட்டத்தில் ராணுவ வீரர், செவிலியர்கள் உள்பட 108 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் நேற்று ராணுவ வீரர், செவிலியர்கள் உள்பட 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1,495 ஆக உயர்ந்துள்ளது.
4. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 23 பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா அதிகம் பாதித்த 23 பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகிறது.
5. திருப்பூர் மாவட்டத்தில் 3,082 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்; 230 பேர் புதிதாக சேர்ப்பு
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 24 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மாவட்டத்தில் 288 ஆக உயர்ந்துள்ளது. 130 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.