உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சும் (செர்பியா), அவரது மனைவி ஜெலினாவும் கொரோனா வைரசின் பாதிப்புக்கு உள்ளானார்கள். சொந்த நாட்டில் நலநிதி கண்காட்சி டென்னிஸ் போட்டிகளை நடத்திய போது அதில் உரிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாததால் அவர்களை கொரோனா தொற்றிக் கொண்டது.
கடந்த 10 நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்ற அவர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து சென்னையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ள நிலையில், பயணிகள் இன்றி பகல் நேர பஸ்கள் சென்றன. கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்லும் கடைசி பஸ் குறித்த விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.