டென்னிஸ்

டென்னிஸ் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட பெடரரிடம் ஆலோசனை கேட்கும் தெண்டுல்கர் + "||" + Any Tips For My Forehand? Tendulkar Asks Federer

டென்னிஸ் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட பெடரரிடம் ஆலோசனை கேட்கும் தெண்டுல்கர்

டென்னிஸ் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட பெடரரிடம் ஆலோசனை கேட்கும் தெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டென்னிஸ் ஆட்டத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டென்னிஸ் ஆட்டத்தின் மீது ஆர்வம் கொண்டவர். ஆண்டுதோறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் வழக்கம் உடையவர். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), தெண்டுல்கருக்கு பிடித்தமான டென்னிஸ் வீரர் ஆவார். தெண்டுல்கர் தான் டென்னிஸ் விளையாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து இருக்கிறார். 11 வினாடி கொண்ட அந்த வீடியோவில் தெண்டுல்கர் ‘போர் ஹேண்ட்’ ஷாட் அடிப்பது இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவை பெடரரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் தெண்டுல்கர் தனது ‘போர் ஹேண்ட்’ ஷாட்டை மேம்படுத்த ஆலோசனை எதுவும் இருக்கிறதா? என்று கேள்வி விடுத்து இருக்கிறார். ஆனால் இதற்கு இன்னும் பெடரர் பதில் எதுவும் அளிக்கவில்லை.