அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து நடால் விலகல்?


அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து நடால் விலகல்?
x
தினத்தந்தி 8 July 2020 10:15 PM GMT (Updated: 8 July 2020 7:29 PM GMT)

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் ஆகஸ்டு 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது.

மாட்ரிட்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் ஆகஸ்டு 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது. ஆனால் நியூயார்க்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நிறைய வீரர்கள் அங்கு செல்ல தயங்குகிறார்கள்.

இந்த நிலையில் உலகின் 2-ம் நிலை வீரரும், அமெரிக்க ஓபனின் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் ரபெல் நடால், செப்டம்பர் 13-ந்தேதி தொடங்கும் மாட்ரிட் ஓபனில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் அவர் அமெரிக்க ஓபனில் ஆடமாட்டார் என்பது ஏறக்குறைய தெளிவாகி விட்டது. செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கும் களிமண் தரை போட்டியான பிரெஞ்ச் ஓபனுக்கு தயாராகும் வகையில் அவர் மாட்ரிட் ஓபனில் களம் இறங்க முடிவு செய்திருக்கிறார்.

Next Story