டென்னிஸ்

ஓய்வை அறிவிக்கும் நேரம் நெருங்கி வருகிறது; பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பேட்டி + "||" + The time to retire is closer; tennis player Roger Federer

ஓய்வை அறிவிக்கும் நேரம் நெருங்கி வருகிறது; பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பேட்டி

ஓய்வை அறிவிக்கும் நேரம் நெருங்கி வருகிறது; பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பேட்டி
டென்னிஸ் போட்டிகளில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பிரபல ரோஜர் பெடரர் ஓய்வை அறிவிக்கும் நேரம் நெருங்கி வருகிறது என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஜுரிச்,

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (வயது 38).  இவர், ஜீத் என்ற ஜெர்மனி நாட்டில் இருந்து வெளிவரும் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், எனது உடல் நலனில் அக்கறை செலுத்தி வரும் நான், டென்னிஸ் மைதானத்தில் விளையாடிய உணர்வை இழந்து உள்ளேன்.

ஓய்வு பெறுவதற்கான நேரம் மிக அருகாமையில் நெருங்கி வருகிறது என எனக்கு தெரியும்.  நான் பொறுமையுடன் இருக்க வேண்டிய தருணம் இது.  தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.  இந்த நேரத்தில் ஓய்வு பெறுவது என்பது மிக எளிது.  ஆனால், டென்னிஸ் விளையாடும் சந்தர்ப்பத்தினை எனக்கு நானே தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

சிறந்த முறையில் மீண்டும் டென்னிஸ் விளையாட்டுக்கு திரும்புவதற்கு எனக்கு சில காலம் ஆகும் என கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் நோவக் ஜோகோவிக்கிடம் தோற்று வெளியேறிய பின்னர், பெடரர் இந்த ஆட்ட தொடரில் எதிலும் விளையாடவில்லை.

ஒருவேளை, தனது ஓய்வு பற்றி பெடரர் உடனடியாக அறிவித்து விட்டால், அவர் டென்னிஸ் ஆடவர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்த வீரராவார்.  இது தவிர ஏ.டி.பி. தரவரிசையில், மொத்தம் 310 வாரங்கள் முதல் இடத்தில் இருந்த பெருமைக்குரியவராகவும் பெடரர் இருந்திடுவார்.