இந்த ஆண்டில் சீனாவில் நடக்க இருந்த 11 சர்வதேச டென்னிஸ் போட்டிகள் ரத்து


இந்த ஆண்டில் சீனாவில் நடக்க இருந்த 11 சர்வதேச டென்னிஸ் போட்டிகள் ரத்து
x
தினத்தந்தி 24 July 2020 11:28 PM GMT (Updated: 24 July 2020 11:28 PM GMT)

இந்த ஆண்டில் சீனாவில் நடக்க இருந்த 11 சர்வதேச டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பீஜிங், 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டில் சீனாவில் எந்த சர்வதேச விளையாட்டு போட்டிகளும் நடைபெறாது என்று அந்த நாட்டின் விளையாட்டு பொது நிர்வாகத் துறை ஏற்கனவே முடிவு செய்து அறிவித்து இருந்தது. இந்த நிலையில் சீனாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருந்த 11 சர்வதேச டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக ஆண்கள் மற்றும் பெண்கள் டென்னிஸ் சங்கங்கள் கூட்டாக நேற்று அறிவித்தன.

மொத்தம் ரூ.104 கோடி பரிசுத்தொகைக்கான ‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப், சீனா ஓபன், வுஹான் ஓபன், குவாங்ஜோவ் ஓபன், ஆசியாவில் ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான ஷாங்காய் மாஸ்டர்ஸ் உள்ளிட்ட போட்டிகளும் இந்த பட்டியலில் அடங்கும். சீனாவில் நடைபெற இருந்த எங்களது உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை கனத்த இதயத்துடனும், மிகுந்த ஏமாற்றத்துடனும் ரத்து செய்து இருப்பதாகவும், அங்கு விரைவில் டென்னிஸ் போட்டிகள் திரும்பும் என்று நம்புவதாகவும் டென்னிஸ் சங்கங்கள் கூறியுள்ளன.

Next Story