டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி விலகல் + "||" + US Open tennis: 'Number one' player Ashley Party withdraws

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி விலகல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி விலகல்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ‘நம்பர் ஒன்’ மங்கை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகியுள்ளார்.
சிட்னி,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனாவின் கோரதாண்டவத்தால் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச டென்னிஸ் போட்டிகளும் நடக்கவில்லை. இதனால் அமெரிக்க ஓபன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இன்னொரு பக்கம் அமெரிக்காவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் வீரர், வீராங்கனைகள் ஒருவித கலக்கத்தில் உள்ளனர். ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) அறிவித்துள்ளார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 24 வயதான ஆஷ்லி பார்ட்டி கூறுகையில், ‘நானும், எனது அணியினரும் சின்சினாட்டி ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிக்காக இந்த முறை அமெரிக்காவுக்கு செல்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம். 

அமெரிக்க ஓபன் மற்றும் சின்சினாட்டி இரண்டும் எனக்கு பிடித்தமான போட்டிகள். ஆனால் கொரோனா காரணமாக அங்கு சென்று விளையாடுவதில் குறிப்பிடத்தக்க அபாயம் இன்னும் உள்ளது. இதனால் வேறு வழியின்றி போட்டியில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு அமெரிக்க ஓபனில் ஆடுவதை எதிர்நோக்கி உள்ளேன். செப்டம்பர் மாதம் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் கலந்து கொள்வது குறித்து இனி வரும் வாரங்களில் முடிவு செய்வேன்’ என்றார்.

ஏற்கனவே விம்பிள்டன் சாம்பியன் சிமோனா ஹாலெப் (ருமேனியா), நடப்பு அமெரிக்க ஓபன் சாம்பியன் பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) ஆகியோரும் அமெரிக்க ஓபனில் இருந்து பின்வாங்கி விட்டனர். அதே சமயம் முன்னாள் சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அமெரிக்க ஓபனில் களம் இறங்க இருப்பதாக அவரது குழுவினர் தரப்பு தெரிவித்துள்ளது.

இதே போல் முதலில் தயக்கம் காட்டிய ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), சிட்சிபாஸ் (கிரீஸ்), டேனில் மெட்விடேவ் (ரஷியா) உள்ளிட்டோர் அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் ஆகஸ்டு 22-ந்தேதி தொடங்கும் சின்சினாட்டி ஓபனில் விளையாட இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் அமெரிக்க ஓபனிலும் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகல்
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகியுள்ளார்.
2. குறைந்த தொகுதிகளை வழங்கியதால் ஏற்க மறுப்பு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. திடீர் விலகல்
குறைந்த தொகுதிகளை ஒதுக்கியதை ஏற்க மறுத்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து நேற்று தே.மு.தி.க. விலகியது. தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
3. ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் அரசியலில் இருந்து சசிகலா விலகல் திடீர் அறிவிப்பால் பரபரப்பு
அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்ப தாக சசிகலா நேற்று இரவு திடீர் என அறிவித்தார். ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
4. சுப்ரீம் கோர்ட்டு அமைத்த 4 உறுப்பினர் குழுவில் இருந்து பூபிந்தர்சிங் மான் விலகல்
வேளாண் சட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அமைத்த 4 உறுப்பினர் குழுவில் இருந்து பூபிந்தர்சிங் மான் விலகியுள்ளார்.
5. பிற நாடுகளின் வான் பகுதியில் உளவு விமானங்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்
பிற நாடுகளின் வான் பகுதியில் உளவு விமானங்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியுள்ளது.