டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை குறைப்பு + "||" + US Open Tennis Prize Reduction

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை குறைப்பு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை குறைப்பு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை குறைக்கப்பட்டுள்ளது.
நியூயார்க், 

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நியூயார்க் நகரில் ரசிகர்கள் இன்றி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான பரிசுத்தொகை விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி மொத்த பரிசுத்தொகை ரூ.400 கோடியாகும். இது 2019-ம் ஆண்டை விட ரூ.28 கோடி குறைவாகும்.

இதில் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டு உள்ள வீரர்களின் நிவாரண நிதிக்கு ரூ.57 கோடி ஒதுக்கப்படுகிறது. இதனால் வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையில் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்றில் இருந்து இறுதிப்போட்டி வரை கணிசமாக சரிகிறது. மகுடம் சூடும் வீரர், வீராங்கனைக்கு பரிசுக்கோப்பையுடன் ரூ.22½ கோடி வழங்கப்படும். இது கடந்த ஆண்டை விட ரூ.6¼ கோடி குறைவாகும். இறுதிப்போட்டியில் தோல்வி அடைபவருக்கு ரூ.11¼ கோடி கிடைக்கும். இதுவும் முந்தைய சீசனை விட ரூ.3 கோடி குறைவாகும். அதே சமயம் முதல் சுற்றில் வெற்றி பெறுவோருக்கு மட்டும் 5 சதவீதம் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு ரூ.45 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பரிசுத்தொகை ‘வெட்டு’ இரட்டையர் பிரிவுக்கும் பொருந்தும்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் நவோமி ஒசாகா
அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அரைஇறுதிக்கு முன்னேறினார்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் போராடி கால்இறுதிக்கு முன்னேறினார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி நீக்கம்
உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகாவிச் அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் செரீனா, டொமினிக் திம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா, ஆஸ்திரியாவின் டொமினிக் திம் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடியும் அசத்தியது.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிடோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், கிவிடோவா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.