அமெரிக்க ஓபனில் பங்கேற்க முர்ரே, கிலிஸ்டர்சுக்கு ‘வைல்டு கார்டு’


அமெரிக்க ஓபனில் பங்கேற்க முர்ரே, கிலிஸ்டர்சுக்கு ‘வைல்டு கார்டு’
x
தினத்தந்தி 7 Aug 2020 10:43 PM GMT (Updated: 7 Aug 2020 10:43 PM GMT)

அமெரிக்க ஓபனில் பங்கேற்க முர்ரே, கிலிஸ்டர்சுக்கு வைல்டு கார்டு சலுகை வழங்கப்பட்டு உள்ளது

நியூயார்க், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நியூயார்க் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் தகுதி சுற்று இன்றி நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்பதற்கு வசதியாக முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, பெல்ஜியம் வீராங்கனை கிம் கிலிஸ்டர்ஸ் ஆகியோருக்கு ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்கப்பட்டு உள்ளது. முர்ரே நீண்டநாள் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். மூன்று குழந்தைகளின் தாயாரான 37 வயதான கிலிஸ்டர்ஸ் ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு இந்த ஆண்டில் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story