டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: நியூயார்க்கில் வருகிற 31-ந் தேதி தொடக்கம் + "||" + US Open Tennis Tournament: Starting on the 31st in New York

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: நியூயார்க்கில் வருகிற 31-ந் தேதி தொடக்கம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: நியூயார்க்கில் வருகிற 31-ந் தேதி தொடக்கம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரங்கேற இருக்கும் இந்த போட்டியில் விளையாடப் போவதாக உலகின் நம்பர் ஒன் வீரரும், 3 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) நேற்று அறிவித்தார். 

‘பல்வேறு இடையூறுகளும், சவால்களும் நிறைந்து இருக்கும் இந்த சமயத்தில் இத்தகைய முடிவை எடுத்தது எளிதான விஷயம் அல்ல. மீண்டும் களம் காண இருப்பது உற்சாகத்தை அளிக்கிறது’ என்று அவர் கூறியுள்ளார். ஜோகோவிச், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.