டென்னிஸ்

டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: செரீனா வில்லியம்ஸ் தோல்வி + "||" + Top Seed Open International Tennis Tournament: Serena Williams loses

டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: செரீனா வில்லியம்ஸ் தோல்வி

டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: செரீனா வில்லியம்ஸ் தோல்வி
டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், சக நாட்டவரான ஷெல்பி ரோஜர்சிடம், செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்தார்.

அமெரிக்காவில் நடந்து வரும் டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் 9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-1, 4-6, 6-7(5) என்ற செட் கணக்கில் சக நாட்டவரும், உலக தரவரிசையில் 116-வது இடம் வகிப்பவருமான ஷெல்பி ரோஜர்சிடம் வீழ்ந்தார்.

முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான செரீனா, தரவரிசையில் டாப்-100 இடத்திற்கு வெளியே உள்ள ஒரு வீராங்கனையிடம் ‘சரண்’ அடைவது 2012-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.