டென்னிஸ்

பிராக் ஓபன் சர்வதேச டென்னிஸ்: சிமோனா ஹாலெப் வெற்றி + "||" + Simona Halep wins 21st WTA title at Prague Open

பிராக் ஓபன் சர்வதேச டென்னிஸ்: சிமோனா ஹாலெப் வெற்றி

பிராக் ஓபன் சர்வதேச டென்னிஸ்: சிமோனா ஹாலெப் வெற்றி
பிராக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், 2-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் வெற்றிபெற்றார்.

பெண்களுக்கான பிராக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் எலிஸ் மெர்டென்சை (பெல்ஜியம்) வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். அவர் வென்ற 21-வது பட்டம் இதுவாகும்.