டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து சிமோனா ஹாலெப் விலகல் + "||" + Simona Halep withdraws from US Open tennis

அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து சிமோனா ஹாலெப் விலகல்

அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து சிமோனா ஹாலெப் விலகல்
அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து சிமோனா ஹாலெப் விலகினார்.
நியூயார்க்,

நியூயார்க்கில் வருகிற 31-ந் தேதி தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் கொரோனா அச்சம் காரணமாக விலகி இருக்கிறார். இது குறித்து விம்பிள்டன் சாம்பியனான சிமோனா ஹாலெப் தனது டுவிட்டர் பதிவில், ‘தற்போது நிலவும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக அமெரிக்க ஓபன் போட்டியில் பங்கேற்க நியூயார்க் செல்வதில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா), நடப்பு சாம்பியன் பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), பெலின்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து), குஸ்னெட்சோவா (ரஷியா) ஆகிய முன்னணி வீராங்கனைகள் இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் நவோமி ஒசாகா
அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அரைஇறுதிக்கு முன்னேறினார்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் போராடி கால்இறுதிக்கு முன்னேறினார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி நீக்கம்
உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகாவிச் அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் செரீனா, டொமினிக் திம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா, ஆஸ்திரியாவின் டொமினிக் திம் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடியும் அசத்தியது.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிடோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், கிவிடோவா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.