டென்னிஸ்

சர்வதேச பெண்கள் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை ‘சாம்பியன்’ + "||" + International Women's Tennis: American 'Champion'

சர்வதேச பெண்கள் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை ‘சாம்பியன்’

சர்வதேச பெண்கள் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை ‘சாம்பியன்’
அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராட் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
லெக்சிங்டன்,

பெண்களுக்கான டாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள லெக்சிங்டன் நகரில் நடந்தது. இதன் ஒற்றையர் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராட், சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜில் டெய்ச்மானை சந்தித்தார்.


1 மணி 42 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெனிபர் பிராட் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ஜில் டெய்ச்மானை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஜெனிபர் பிராட் உலக தரவரிசையில் 9 இடங்கள் ஏற்றம் கண்டு 40-வது இடத்தை பிடித்துள்ளார். தோல்வி அடைந்த ஜில் டெய்ச்மான் 9 இடங்கள் முன்னேறி 54-வது இடத்தை பெற்றுள்ளார்.