டென்னிஸ்

சின்சினாட்டி டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Cincinnati Tennis: Djokovic, Serena advance to 3rd round

சின்சினாட்டி டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர்.
நியூயார்க்,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கழுத்து வலிக்கு சிகிச்சை பெற்று ஆடிய நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6 (7-2), 6-4 என்ற நேர்செட்டில் ரிச்சர்ட்ஸ் பெரான்கிஸ்சை (லிதுவேனியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


ஒலிம்பிக் சாம்பியனான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் 7-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வெளியேற்றினார். மற்ற ஆட்டங்களில் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 2-6, 1-6 என்ற நேர்செட்டில் செர்பியா வீரர் கிராஜினோவிச்சிடமும், பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 5-7, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு வந்த மார்டோன் புசோவிக்கிடமும் (ஹங்கேரி) அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-6 (8-6), 3-6, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் அரன்ட்சா ருஸ்சை 2 மணி 48 நிமிடங்கள் போராடி தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். நவோமி ஒசாகா (ஜப்பான்), சபலென்கா (பெலாரஸ்), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) ஆகியோரும் 3-வது சுற்றை எட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிடோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், கிவிடோவா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
2. சின்சினாட்டி டென்னிஸ்: விலகல் முடிவை கைவிட்டு களம் இறங்கிய ஒசாகா - அரைஇறுதியில் வெற்றி பெற்றார்
சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் விலகல் முடிவை கைவிட்டு களம் இறங்கிய நவோமி ஒசாகா, அரைஇறுதியில் வெற்றி பெற்றார்.
3. சின்சினாட்டி டென்னிஸ்: ஜோகோவிச், அஸரென்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம் - இனவெறி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக ஒருநாள் ஆட்டம் ரத்து
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், அஸரென்கா அரைஇறுதிக்கு முன்னேறினர். இனவெறி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நேற்றைய ஆட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
4. சின்சினாட்டி டென்னிஸ்: ஜோகோவிச் கால்இறுதிக்கு தகுதி
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேறினார். செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுடன் வெளியேறினார்.
5. சின்சினாட்டி டென்னிஸ்: வீனஸ், சிலிச் அதிர்ச்சி தோல்வி
சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ், மரின் சிலிச் ஆகியோர் தோல்வியடைந்தனர்.