டென்னிஸ்

டென்னிஸ் சகோதரர்கள் திடீர் ஓய்வு + "||" + Sudden retirement of the tennis brothers

டென்னிஸ் சகோதரர்கள் திடீர் ஓய்வு

டென்னிஸ் சகோதரர்கள் திடீர் ஓய்வு
பிரையன் இரட்டை சகோதரர்கள் டென்னிஸ் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
நியூயார்க்,

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இரட்டையர் பிரிவில் வெற்றிகரமான ஜோடியாக உருவெடுத்து எண்ணற்ற சாதனைகளை படைத்து இருக்கும் அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் இரட்டை சகோதரர்கள் டென்னிஸ் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.


42 வயதான இருவரும் கூட்டாக 16 கிராண்ட்ஸ்லாம், 4 ஆண்கள் சாம்பியன்ஷிப் உள்பட 119 பட்டங்களை வாரி குவித்துள்ளனர். ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமும் வென்று இருக்கிறார்கள். 438 வாரங்கள் இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தை அலங்கரித்த பெருமையும் இவர்களுக்கு உண்டு. ‘இன்னும் டென்னிஸ் விளையாட ஆசை தான். ஆனால் உடலை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. விலகுவதற்கு இதுவே சரியான தருணம்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.