சின்சினாட்டி டென்னிஸ்: விலகல் முடிவை கைவிட்டு களம் இறங்கிய ஒசாகா - அரைஇறுதியில் வெற்றி பெற்றார்


சின்சினாட்டி டென்னிஸ்: விலகல் முடிவை கைவிட்டு களம் இறங்கிய ஒசாகா - அரைஇறுதியில் வெற்றி பெற்றார்
x
தினத்தந்தி 29 Aug 2020 12:32 AM GMT (Updated: 29 Aug 2020 12:32 AM GMT)

சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் விலகல் முடிவை கைவிட்டு களம் இறங்கிய நவோமி ஒசாகா, அரைஇறுதியில் வெற்றி பெற்றார்.

நியூயார்க்,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் அரைஇறுதிக்கு முன்னேறி இருந்த ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, அமெரிக்காவில் கருப்பின இளைஞரை போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை கண்டித்து போட்டியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.

பிறகு இன பாகுபாட்டுக்கு எதிராக நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஒரு நாள் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து டென்னிஸ் சங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனது முடிவை மாற்றிக்கொண்டு நேற்று மீண்டும் களம் இறங்கிய ஒசாகா 6-2, 7-6 (5) என்ற செட் கணக்கில் எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Next Story