டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜூம்ஹரை சந்திக்கிறார், ஜோகோவிச் + "||" + US Open Tennis: Meets Zumhair in the first round, Djokovic

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜூம்ஹரை சந்திக்கிறார், ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜூம்ஹரை சந்திக்கிறார், ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், போஸ்னியா வீரர் ஜூம்ஹரை சந்திக்கிறார். இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்க வீரரு டன் மோத காத்திருக்கிறார்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நாளை மறுதினம் தொடங்கி 13-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைக்கு மத்தியில் ரசிகர்கள் இன்றி நடக்கும் இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்ற விவரம் குலுக்கல் மூலம் நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது.


இதன்படி நம்பர் ஒன் வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் தனது முதலாவது சுற்றில் தரவரிசையில் 107-வது இடம் வகிக்கும் டாமிர் ஜூம்ஹரை (போஸ்னியா) சந்திக்கிறார். கணிப்புகள் சரியாக அமைந்தால் ஜோகோவிச் அரைஇறுதியில் சிட்சிபாஸ் (கிரீஸ்) அல்லது அலெக்சாண்டர் ஸ்வெரேவையும் (ஜெர்மனி), இறுதிப்போட்டியில் 3-ம் நிலை வீரர் டொமினிக் திம்மையும் (ஆஸ்திரியா) சந்திக்ககூடும். டொமினிக் திம் தனது முதல் சவாலை ஜாமி முனாருடன் (ஸ்பெயின்) தொடங்குகிறார். ஒற்றையர் பிரிவில் களம் காணும் ஒரே இந்தியரான தரவரிசையில் 122-வது இடம் வகிக்கும் சுமித் நாகல் முதல் சுற்றில் தரநிலையில் தன்னைவிட 6 இடம் பின்தங்கிய அமெரிக்காவின் பிராட்லி கிளானை சந்திக்கிறார். நாகல் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தால் 2-வது சுற்றில் டொமினிக் திம்முடன் மல்லுகட்ட வேண்டியது வரும்.

பெண்கள் ஒற்றையா பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சக நாட்டவர் கிறிஸ்டி அன்னை எதிர்கொள்கிறார். போட்டித்தரநிலையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) முதல் சுற்றில் கலினினாவுடன் (உக்ரைன்) மோதுகிறார்.