டென்னிஸ்

சின்சினாட்டி டென்னிசில் வெற்றி: நடாலின் சாதனையை சமன் செய்தார், ஜோகோவிச் + "||" + Victory in Cincinnati Tennis: Djokovic equals Nadal's record

சின்சினாட்டி டென்னிசில் வெற்றி: நடாலின் சாதனையை சமன் செய்தார், ஜோகோவிச்

சின்சினாட்டி டென்னிசில் வெற்றி: நடாலின் சாதனையை சமன் செய்தார், ஜோகோவிச்
சின்சினாட்டி டென்னிசில் வெற்றி பெற்றதன் மூலம் நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார்.
நியூயார்க்,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீரர் செர்பியாவின் ஜோகோவிச் 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.


இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் கோப்பை வகையைச் சேர்ந்தது. இதன் மூலம் அதிக முறை மாஸ்டர்ஸ் கோப்பையை வென்ற ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலின் (35 முறை) சாதனையை 33 வயதான ஜோகோவிச் சமன் செய்தார். அத்துடன் ஆயிரம் புள்ளி வழங்கும் 9 வகையான மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் குறைந்தது 2 முறை மகுடம் சூடிய ஒரே வீரர் ஜோகோவிச் ஆவார்.