டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடக்க சுற்றில் கெர்பர் வெற்றி + "||" + kerber wins US Open tennis opening round

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடக்க சுற்றில் கெர்பர் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடக்க சுற்றில் கெர்பர் வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடக்க சுற்றில் கெர்பர் வெற்றி பெற்றார்.
நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இந்த போட்டி அரங்கேறியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 2016-ம் ஆண்டு சாம்பியனுமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் வான்ட்ரோசோவா (செக்குடியரசு), கிறிஸ்டினா மாடினோவிச் (பிரான்ஸ்), கிராசெவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.