டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா, டொமினிக் திம் அரைஇறுதிக்கு முன்னேற்றம் + "||" + US Open tennis: Serena, Dominic Tim advance to semifinals

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா, டொமினிக் திம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா, டொமினிக் திம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 10-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம், 28-வது இடத்தில் உள்ள அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) சந்தித்தார்.

இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய டொமினிக் திம் 6-1, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 4 நிமிடம் தேவைப்பட்டது. அத்துடன் 27 வயதான டொமினிக் திம் அமெரிக்க ஓபன் வரலாற்றில் அரைஇறுதியை எட்டிய முதல் ஆஸ்திரிய வீரர் என்ற பெருமையையும் தனதாக்கினார்.

மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ரஷிய வீரரான டேனில் மெட்விடேவ் 7-6 (8-6), 6-3, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் ஆந்த்ரே ருப்லெவை தோற்கடித்தார். அரைஇறுதியில் மெட்விடேவ், டொமினிக் திம்மை எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பல்கேரிய வீராங்கனை பிரோன்கோவாவை வீழ்த்தி 14-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். 38 வயதான செரீனா தொடர்ந்து 3 ஆட்டங்களில் ஒரு செட்டை பறிகொடுத்து அதன் பிறகு போராடி மீண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) தன்னை எதிர்த்த எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) 6-1, 6-0 என்ற நேர்செட்டில் துவம்சம் செய்தார். இந்த ஆட்டம் 73 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

2013-ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல்முறையாக அரைஇறுதிக்குள் வந்துள்ள அஸரென்கா அடுத்து செரீனாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இருவரும் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இது 23-வது முறையாகும். இதுவரை நடந்த மோதல்களில் செரீனா 18 முறையும், அஸரென்கா 4 தடவையும் வெற்றி பெற்று உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை புதிய அறிக்கையில் தகவல்
ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனையின் புதிய அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரபெல் நடால், ஜோகோவிச் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
3. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கிவிடோவா, சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
4. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் பிரஜ்னேஷ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரான்சில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் கன்னேஸ்வரன் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி; அஸரென்கா, ஒசாகா முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தோல்வி கண்டு வெளியேறினார். அஸரென்கா, நவோமி ஒசாகா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.