டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச் + "||" + Italy Open Tennis: Djokovic in the semifinals

இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச்
ஜோகோவிச் (செர்பியா) 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் டொமினிக் கோப்பெரை (ஜெர்மனி) போராடி தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
ரோம்,

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் டொமினிக் கோப்பெரை (ஜெர்மனி) போராடி தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். பெண்கள் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அஸரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார்.