டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி + "||" + Italy Open tennis Nadal shock defeat

இத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி
9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரோம்,

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினா வீரர் டியாகா ஸ்வாட்ஸ்மன் வீழ்த்தினார். நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ருட்டை (நார்வே) வெளியேற்றி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.


பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதியில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் முகுருஜாவை (ஸ்பெயின்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி 16 நிமிடங்கள் நீடித்தது.