டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் பிரஜ்னேஷ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + French Open tennis; India's Brajnesh advances to 2nd round

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் பிரஜ்னேஷ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் பிரஜ்னேஷ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரான்சில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் கன்னேஸ்வரன் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பாரீஸ்,

நடப்பு ஆண்டுக்கான கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்து வருகின்றன.  இதில், ஒற்றையர் பிரிவில் இந்தியாவில் 2வது இடம் வகிக்கும் பிரஜ்னேஷ் கன்னேஸ்வரன் மற்றும் துருக்கி நாட்டை சேர்ந்த செம் இல்கெல் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில் துருக்கி வீரரை 2 நேர் செட்டுகளில் வீழ்த்தி பிரஜ்னேஷ் எளிதில் வெற்றி பெற்றுள்ளார்.  முதல் செட்டில் சற்று கடுமையாக போராடிய பிரஜ்னேஷ் 2வது செட்டில் வெற்றியை பெறுவதற்கு அதிகம் போராடவில்லை.  இதனால் 6-3, 6-1 என்ற நேர்செட்டில் இல்கெலை வீழ்த்தி 2வது சுற்றுக்கு பிரஜ்னேஷ் முன்னேறினார்.

எனினும், இந்தியாவின் சிறந்த வீரரான சுமித் நாகல் ஜெர்மனியின் டஸ்டின் பிரவுனிடம் கடுமையாக போராடி தோற்று வெளியேறினார்.  ஒரு மணிநேரம் 47 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியின் முடிவில் 6-7(4), 5-7 என்ற செட் கணக்கில் பிரவுனிடம் சுமித் வெற்றியை பறிகொடுத்து உள்ளார்.

2வது சுற்றில் 3-0 என்ற கணக்கில் சுமித் முன்னிலையில் இருந்தபோதிலும், வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்காமல் பிரவுன் அதனை தட்டி சென்று விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரபெல் நடால், ஜோகோவிச் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
2. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில்க் ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
3. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கிவிடோவா, சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
4. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து பிரபல வீராங்கனை ஒசாகா விலகல்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித்தொடரில் இருந்து பிரபல வீராங்கானை ஒசாகா விலகுவதாக அறிவித்துள்ளார்.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி; அஸரென்கா, ஒசாகா முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தோல்வி கண்டு வெளியேறினார். அஸரென்கா, நவோமி ஒசாகா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.