டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: அங்கிதா போராடி வெற்றி + "||" + French Open qualifiers: Ankita Raina battles past Jovana Jovic to reach second round

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: அங்கிதா போராடி வெற்றி

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: அங்கிதா போராடி வெற்றி
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது.
பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோவனா ஜோவிச்சை (செர்பியா) போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 47 நிமிடங்கள் நீடித்தது. ரெய்னா அடுத்து ஜப்பானின் குருமி நராவை எதிர்கொள்கிறார். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 5-7, 2-6 என்ற நேர் செட்டில் டிரிஸ்டன் லமாசினிடம் (பிரான்ஸ்) தோற்று வெளியேறினார்.