டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சுவீடன் வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச் + "||" + Meets Sweden player in first round, Djokovic

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சுவீடன் வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சுவீடன் வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நாளை தொடங்குகிறது.
பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது. இதன்படி நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், முதல் சுற்றில் இகோர் ஜெராசிமோவை (பெலாரஸ்) சந்திக்கிறார். கால்இறுதியில் நடால் முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) சந்திக்க வேண்டி வரலாம். ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச் (செர்பியா), மிகைல் மிருடன் (சுவீடன்) தனது சவாலை தொடங்குகிறார். முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) முதல் சுற்றில் ஒலிம்பிக் சாம்பியன் ஆன்டி முர்ரேவை (இங்கிலாந்து) சந்திக்கும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. பெண்கள் ஒற்றையரில் 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) சோரிப்ஸ் டோர்மோவையும் (ஸ்பெயின்), 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சக நாட்டவர் கிறிஸ்டி ஆனையும் தங்களது முதல் சுற்றில் எதிர்கொள்ள உள்ளனர்.


இதற்கிடையே கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக், சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச் ஆகியோர் கடைசிநேரத்தில் பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகியுள்ளனர்.