டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பிளிஸ்கோவா முதல் சுற்றில் வெற்றி + "||" + French Open tennis: Djokovic, Bliskova win first round

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பிளிஸ்கோவா முதல் சுற்றில் வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்:  ஜோகோவிச், பிளிஸ்கோவா முதல் சுற்றில் வெற்றி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பிளிஸ்கோவா முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீரர் பெரேட்டினி (இத்தாலி) 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வாசெக் போஸ்பிசிலை (கனடா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0, 6-2, 6-3 என்ற நேர் செட்டில் மிகைல் மிர்ரை (சுவீடன்) வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றார். முன்னதாக 12 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஜெராசிமோவை (பெலாரஸ்) வெளியேற்றி வெற்றியோடு தொடங்கினார். பிரெஞ்ச் ஓபனில் தனது 94-வது வெற்றியை பதிவு செய்த நடால் அடுத்து அமெரிக்காவின் மெக்கென்ஸி மெக்டொனால்டுவை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையரில் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) முதல் தடையை கடப்பதற்கு 2 மணி 15 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. அவர், தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டிய மயார் ஷெரிப்பை (எகிப்து) 6-7 (9-11), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். 2017-ம் ஆண்டு சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 6-2, 6-1 என்ற நேர் செட்டில் 62 நிமிடங்களில் மேடிசன் பிரிங்கிலை (அமெரிக்கா) துவம்சம் செய்தார்.

மற்றொரு ஆட்டத்தில் 25-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் ஜெனிபர் பிராட்டி 4-6, 6-3, 7-9 என்ற செட் கணக்கில் 17 வயதான கிளாரா டாசனிடம் (டென்மார்க்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 45 நிமிடங்கள் நீடித்தது. சோபியா கெனின் (அமெரிக்கா), ரைபகினா (கஜகஸ்தான்), ஆன்ஸ் ஜாபெர் (துனிசியா), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமேசோனியா 1 செயற்கைக்கோள் ஏவும் பணி வெற்றி: பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
அமேசோனியா 1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் பணி வெற்றியடைந்த நிலையில் பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
2. சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே, முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படும் - சரத்குமார்
சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே, முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
3. வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது
வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே வெஸ்ட்இண்டீஸ் 409 ரன்னும், வங்காளதேசம் 296 ரன்னும் எடுத்தன.
4. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி வெற்றி
தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது.
5. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி திரில் வெற்றி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி திரில் வெற்றி.