டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதிக்கு நடால் முன்னேற்றம்; ஹாலெப் அதிர்ச்சி தோல்வி + "||" + French Open tennis: Nadal advances to quarterfinals; Halep shock failure

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கால்இறுதிக்கு நடால் முன்னேற்றம்; ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்:  கால்இறுதிக்கு நடால் முன்னேற்றம்; ஹாலெப் அதிர்ச்சி தோல்வி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் 12 முறை சாம்பியனான ரபெல் நடால் கால்இறுதிக்கு முன்னேறினார். முன்னாள் சாம்பியன் ஹாலெப் 4-வது சுற்றுடன் நடையை கட்டினார்.
பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘களிமண் தரையின் ஹீரோ’வான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-1, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் தகுதிநிலை வீரர் செபாஸ்டியன் கோர்டாவை (அமெரிக்கா) விரட்டியடித்து 14-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். நடப்பு சாம்பியனான நடால் பிரெஞ்ச் ஓபனில் பதிவு செய்த 97-வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 3-6, 3-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் ஜானிக் சினெரிடம் (இத்தாலி) பணிந்தார். தரவரிசையில் 75-வது இடத்தில் இருக்கும் ஜானிக் சினெர் கால்இறுதியில் நடாலுடன் மோதுகிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவருமான சிமோனா ஹாலெப் (ருமேனியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 6-1, 6-2 என்ற நேர் செட்டில் 54-ம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) வீழ்த்தினார். ஸ்வியாடெக்கின் ஒரு சர்வீசை கூட பிரேக்க செய்ய முடியாமல் திணறிய ஹாலெப் எதிர்ப்பு இன்றி வெறும் 68 நிமிடங்களில் ‘சரண்’ அடைந்தது ஆச்சரியம் அளித்தது. வாகை சூடிய 19 வயதான ஸ்வியாடெக் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியில் முதல்முறையாக கால்இறுதிக்குள் கால்பதித்துள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 159-வது இடத்தில் உள்ள மார்ட்டினா டிரெவிசன் (இத்தாலி) 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 8-ம் நிலை வீராங்கனை கிகி பெர்டென்சை(நெதர்லாந்து) வெளியேற்றினார். இதே போல் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-1, 6-3 என்ற நேர் செட்டில் கரோலின் கார்சியாவையும் (பிரான்ஸ்), நடியா போடோரோஸ்கா (அர்ஜென்டினா) 2-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கிரெஜ்சிகோவாவையும் (செக்குடியரசு) வென்று கால்இறுதியை உறுதி செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. “உளவுத்துறையின் தோல்வி இல்லை என்றால், இதன் பொருள்” - மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து ராகுல் காந்தி கேள்வி
உளவுத்துறையின் தோல்வி இல்லை என்றால், இதன் பொருள் என்ன என்று மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
2. ஜெர்மனி சுற்று பயணத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கடுமையாக போராடி தோல்வி
ஜெர்மனியில் நடந்து வரும் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி கடுமையாக போராடி தோல்வி அடைந்தது.
3. 234 தொகுதிகளிலும் நடத்திய ‘ஆன்லைன்’ பரீட்சையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 72 பேர் தோல்வி
234 தொகுதிகளிலும் நடத்திய ‘ஆன்லைன்’ பரீட்சையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 72 பேர் தோல்வி 5-ந் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.